பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தமிழன்னை வளாகத்தில் தமிழர் நீதிக்கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கத்தின் சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் திருவிழா கட்சியின் நிறுவனத் தலைவர் சுபா இளவரசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழரின் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் பரதநாட்டியம், சிலம்பக்கலைகள். தற்காப்பு கலைகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
புதுப்பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கலிட்டு புத்தாடை அணிந்து செங்கரும்பு, மாவிலை தோரணங்கள் , தலை வாழை இலையில் பொங்கலை வைத்து சூரிய பகவானை வழிபட்டனர்.
இதில் கலந்துகொண்ட ஆண்கள்,பெண்கள் என ஆண்கள், பெண்கள் என நிறுவனத் தலைவர் சுபா இளவரசன் அவர்கள் தொண்டர்கள் , நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வேட்டி, சட்டை, சேலைகள் என புதிதாக புத்தாடைகள் மற்றும் பொங்கல் கரும்பு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேருர். கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்