முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108வது பிறந்தநாளை ஒட்டி அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஆர் வி ரஞ்சித்குமார் தலைமையில் பிறந்தநாள் கொண்டாடினர்.

காஞ்சிபுரம் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான பாரத ரத்னா எம்ஜிஆர் 108வது பிறந்தநாள் விழாவை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் முத்தியால்பேட்டை பகுதியில் மாவட்ட செயலாளர் ஆர் வி ரஞ்சித்குமார் தலைமையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எம்ஜிஆர் திருஉருவப்படம் வைத்து படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து இட்லி வடை பொங்கல் கூடிய சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு காலையில் பணிக்கு செல்பவர்கள் கூலி தொழிலாளர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சிற்றுண்டியை வாங்கி அருந்தி சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் வஜ்ரவேலு, துணை செயலாளர்கள் சகுந்தலா கோபால், சோமங்கலம் ரமேஷ், மாநகர கழக நிர்வாகிகள் வேலு, பழனி, ஒன்றிய செயலாளர் அருண், கோவிந்தராஜ், மாகரல் சசி, வல்லம் பழனி, எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பூக்கடை ஜகா, பேரூராட்சி செயலாளர்கள் வாலாஜாபாத் ஜெயகாந்தன், உத்திரமேரூர் குலசேகரன், நிக்ஸன் மற்றும் நிர்வாகிகள் சதீஷ், பாபு, சந்திரசேகர், தேவன், தட்சிணாமூர்த்தி, மானாமதி ஞானசேகரன், யோகானந்தன், சரத்குமார் என பலர் கலந்து கொண்டு எம் ஜி ஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.