கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முத்துகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் குமார் (20) கடந்த 15ம் தேதி டி.வி. புத்தூர் சாலை விபத்தில் காயம் அடைந்தார்.
அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சுமார் நான்கு அங்குல இருசக்கர வாகன உதிரிப்பாகத்தை அவரது உடலில் இருந்து அரசு தலைமை மருத்துவர் சுவாமிநாதன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அகற்றி சாதனை படைத்தனர். அரசு மருத்துவர்களை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.