திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்திஜி கலையரங்கத்தில் நத்தம் தமிழர் கலாச்சார குழு சார்பில் நத்தத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பட்டாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக குருநாதன் கோயிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பொங்கல் வைத்து பிரசாதம் காளைகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.
இதில் திமுக நகர செயலாளர் ராஜ்மோகன், பேரூராட்சி கவுன்சிலர் இஸ்மாயில், பண்பாட்டு தமிழர் கலாச்சாரக் குழு உறுப்பினர்கள் அய்யனார், அசோகன், ராகப்பன், தமிழ்முகம்,முருகமன்னர், மகாலிங்கம், ராதா, ஜின்னாபிரியம், செல்வம், எழியாஸ், சுந்தரம், அழகர்சாமி,தென்னரசு உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.