நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதை தடுக்க கண்காணிப்பு தேவை டாக்டர் அருணா அஜீஸ் கோரிக்கை

“தமிழ்நாடு நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதை தடுக்க கண்காணிப்பு தேவை என தமிழரின் தலைமை விவசாயிகள் மாநிலத் தலைவர் டாக்டர் அருணா அஜீஸ் தெரிவித்துள்ளனர்.”

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 2024-2025 சம்பா பருவம் நெல் கொள்முதல் பணி துவங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் பணி எவ்வித தேக்கமும் இல்லாமல் விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்வதற்கு தடை இல்லாமல் போதிய சாக்கு கள் இருப்பில் வைத்து உள்ளதை மாவட்ட ஆட்சியர் உறுதிப் படுத்த வேண்டும்.

கொள்முதல் செய்யும் போது விவசாயிகளிடம் ஈரப்பதம் கூடுதலாக உள்ளதாக கூறி காக்க வைப்பதை தவிர்க்க வேண்டுகிறோம். ஈரப்பதமானி செயல்படுத்தும் முறையை நெல்லின் வகைக்கு எப்படி என்பதை அனைத்து விவசாயிகளும் அறிந்து கொள்ளும் வகையில் கொள்முதல் நிலைய பணியாளர்கள் செய்முறை விபரம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது கூடுதல் எடை வைத்து நெல் எடுப்பதையும், பிடித்தம் செய்த நெல் மூட்டைக்கு (சிப்பதிற்கு) 40ரூபாய் முதல் 50ரூபாய் வரை கையூட்டு பெறுவதை மாவட்ட ஆட்சியர் சிறப்பு குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமத்திற்கு பணம், கோவிலுக்கு பணம், அரசியல் கட்சியினருக்கு பணம் என்று கூறி மூட்டைக்கு 3 ரூபாயில் இருந்து 5 ரூபாய் வரை பணம் பறிக்கும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோதனை என்ற பெயரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று 3000ரூபாயில் இருந்து 5000ரூபாய் வரை மிரட்டி கையூட்டு பெரும் வட்ட வழங்கல் அலுவலர்கள், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

மேலும் கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளுக்கு காலதாமதம் இல்லாமல் உடனடியாக அவர்களது வங்கி கணக்கில் தொகை வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *