விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஐ.என்.டி.யு.சி நகரில் வசித்து வரும் தொழிலதிபர் கார்த்திக் (வயது 50). இவரது வீட்டில் நேற்று நள்ளிரவு மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. சத்தம் கேட்டு
கார்த்திக் எழுந்து சென்று பார்த்ததில் வராண்டாவில் 6அடி நீளமுள்ள மலைப்பாம்பு நெளிந்து கொண்டிருப்பதை கண்டு
திடுக்கிட்டார்.
உடனே தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்துவிட்டு
உஷாராக வீட்டை உட்புறமாக பூட்டிக் கொண்டார். ராஜபாளையம்
தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை வாவகமாக பிடித்து சென்று வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். நள்ளிரவில் குடியிருப்புகள் அதிகம் உள்ள ஐ.என்டியுசி நகர் பகுதிக்குள் மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது