தேனி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அரிசி பருப்புக்கு நுகர்வோரை. அலைய வைக்கும் அவலம் தேனி மாவட்டத்தில் முக்கிய நகரங்களான கம்பம் சின்னமனூர் பெரியகுளம் போடிநாயக்கனூர் ஆண்டிபட்டி மற்றும் இதை சுற்றி உள்ள பேரூர் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் மாதந் தோறும் வழங்கப்படும் அரிசி பருப்பு பாமாயில் சீனி போன்ற பொருட்கள் கிடைப்பதில் பொதுமக்களை ரேஷன் கடைக்காரர்கள் அலைக்கழிக்கிறார்கள் பொதுவாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் ஏதாவது இரண்டு பொருட்கள் தற்போது இல்லை இதை மட்டும் வாங்கி செல்லவும் மீதமுள்ள பொருட்கள் சில நாட்கள் கழித்து வாங்கிக் கொள்ளவும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் பொது மக்களை அலைக்கழிக்கிறார்கள் இந்த மாதம் ஜனவரி அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது
இதில் பச்சரிசி சீனி கரும்பு இது மட்டுமே பொங்கல் தொகுப்பாக வழங்கப்பட்டது இதனால் இந்த மாதம் மாதந்தோறும் வழங்கக்கூடிய பொருட்கள் சனிக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகின்றன ஆனால் மாதந்தோறும் வழங்கப்படும் பொருட்களில் சீனி பருப்பு போன்ற பொருள்கள் இல்லை இரண்டு நாட்கள் கழித்து வாங்கிக் கொள்ளவும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் பொதுமக்களை அலைக்கப்படுகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் பி. சூரியகலா கூறும்போது பொதுமக்கள் முக்கியமாக ஏழை எளிய மக்கள் ரேஷன் கடையில் வழங்கும் பொருட்களை வைத்து தான் தங்களின் வாழ்வாதாரத்தை கழித்து வருகிறார்கள்
ஆனால் ரேஷன் கடைகளில் பொருட்கள் கேட்டு செல்லும் பொது மக்களிடம் ஏதாவது முக்கியமான இரண்டு பொருள்கள் வரவில்லை இருப்பு இல்லை இரண்டு நாட்கள் கழித்து வந்து வாங்கிக் கொள்ளவும் என்று கூறுகிறார்கள்
ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மக்கள் ரேஷன் கடையில் பொருட்கள் கேட்டால் இன்னும் பொருட்கள் வரவில்லை வந்தவுடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி அந்த மாதத்தில் அந்த பொருட்கள் கிடைப்பதே கிடையாது
இது மாதந்தோறும் நடைபெறும் அவலமாக உள்ளது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது இவ்வாறு அவர் கூறினார்