தென்காசி மாவட்டம், கடையம் மாட்டுச் சந்தை முக்கு அருகில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது இதில் இரண்டு பஸ்களின் முன் பகுதி சேதமடைந்தது இரண்டு பஸ்களில் பயணம் செய்த 15 நபர்களுக்கு மேல் காயம் அடைந்தனர்
இதனையடுத்து அவர்களை மீட்டு பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது