கும்பகோணம் செய்தியாளர்
ஆர் .தீனதயாளன்
கும்பகோணம் அருகே மெலட்டூரில் ஹோம் ஃபார் ஹிமானிட்டி விருது பெற்ற பாகவத மேளா மாணவிகளின் பின்னல் கோலாட்டம்…
நாட்டியம் பயிலும் மாணவிகளுடன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை கொண்டாடிய பிரான்ஸ் நாட்டு தம்பதிகள்..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா மெலட்டூரில் அமைந்துள்ள பாகவத மேளா வித்யாலயா பெயர் பெற்றது. இங்கு வருகை புரிந்த பிரான்ஸ் நாட்டின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் உலகளாவிய உருமாற்ற அரங்கின் நிறுவனர் பேராசிரியர் அலெக்ஸாண்டர் ஷீஃபர் மற்றும் அவரது மனைவி டாக்டர் ராமாமணி ஆகியோர் கிராம மக்களுடன் உரையாற்றினர்.
தொடர்ந்து மெலட்டூரில் ஹோம் ஃபார் ஹிமானிட்டி என்ற விருது பெற்ற பாகவேத மேளா வித்யாலயா மாணவிகளின் பின்னல் கோலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கண்டு ரசித்த பிரான்ஸ் நாட்டு தம்பதிகள், உற்சாகத்துடன் மாணவிகளுடன் சேர்ந்து கோலாட்டத்தில் ஈடுபட்டனர். இது காண்பவர்களை பரவசப்படுத்தியது.
தொடர்ந்து ஏழு கண்டங்களில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் ஆப்பிரிக்கா, ஆசியா, வடஅமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று விட்டு தற்போது இந்தியா வந்துள்ளதாக தெரிவித்த பிரான்ஸ் தம்பதியர்கள் தொடர்ந்து உலகம் முழுவதும் ஒற்றுமையை நோக்கி தங்களது பயணம் தொடரும் என கூறினர்.