பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரண மாக மதுரையில் இருந்து தனது சொந்த ஊர்களுக்கு சென்ற பொது மக்கள் இன்றுடன் விடுமுறை முடிவதால் தென் மாவட்டங்களில் இருந்து பெரும்பாலானோர் பஸ்கள் மற்றும் ரயில்கள் சென்னை மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.
தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு ரெயில் மூலம் ஏராளமானோர் வருகை தந்தனர் இது போல் தென்மாவட்டத் திலிருந்து பஸ்கள் மூலம் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வந்நது ஏறும், இறங்ம் பயணிகள் கூட்ட நெரிசலாக காணப்பட்டது.போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் சொந்த ஊர் செல்ல குழந்தைகளுடன் சிரமப்பட்டனர்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை களில் நிலையத்திற்கு ரயில் மக்கள் வருகை குறைவாக இருக்கும். ஆனால் இன்று மதுரை ரயில் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இது போல் ஆரப்பாளையம் பஸ் நிலையமும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
மேலும் தனது சொந்த ஊருக்கு சென்றவர்கள் பெரும் பாலானோர் இன்று இரவு நாளை காலை மதுரைக்கு பஸ்கள் மூலம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.