கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
குடவாசல் அருகே திருவிடச்சேரியில் பொதுமக்கள் பயன்படுத்திய குளத்தை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தர கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போலீசாரால் கைது..
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா திருவிடச்சேரி ஊராட்சி கோயில்பத்து கிராமத்தில் 100ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்கள் பயன்படுத்திய குளத்தை தனிநபர் கடந்த நான்கு வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி உள்ளதாகவும் ,கட்டிடங்கள் கட்டி உள்ளதாகவும், மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செயல்படாத வகையில் புதிய கட்டிடங்களை கட்டப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட ஊராட்சி நிர்வாகிகளிடம் பலமுறை மனுக்கள் அளிக்கும் எந்த ஒரு பயன் இல்லாததால் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திருவாரூர் வடக்கு மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் திடீரென பேருந்தை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்,போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
மேலும் போராட்ட மக்களிடம் குடவாசல் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை வராததால் போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.