கோவை டெக்ஸ்சிட்டி கலை அறிவியல் கல்லூரி கடந்த 1993 ஆம் ஆண்டு துவங்கி சிறுபான்மை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக டெக்ஸிட்டி கல்வி அறக்கட்டளை துவங்கி செயல்பட்டு வருகின்றது..

பாராமெடிக்கல் துறையில் தொலை நோக்கு பார்வையுடன் துவங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனங்களின் டெக்ஸிட்டி கலை அறிவியல் கல்லூரியில் புதிய கட்டிடம் மற்றும் கல்வி துறை சார்ந்த படிப்புகள் துவக்க விழா மதுக்கரை மார்க்கெட் பாலத்துறை சாலையில் உள்ள கல்லூரி அரங்கில் நடைபெற்றது..

இதில் மறைந்த ஜனாப். பி.வி. ஹசன் சாஹிப் நினைவாக புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆன நவாஸ்கனி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ஹித்யத்துல்லாஹ், விருந்தினராகக் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார்.

விழாவில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் தவாஸ்கனி ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு கல்வி மட்டுமே முக்கியம் என தெரிவித்த அவர்,தொழில் மற்றும் வளலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சமூதாயம் மற்றும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிகளின் பங்களிப்பில் மாற்ற முடியாத சக்தியாக கல்வி இருப்பதை சுட்டி கட்டினார்..

தொடர்ந்து பேசிய, காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ஹித்யத்துல்லாஹ், இஸ்லாமிய வேதங்களில் குறிப்பிடப்பட்ட அறிவியல் அறிவுகள் தற்போது கண்டு பிடிக்கப்பட்டு வருவதை சுட்டி காட்டி பேசினார்..

இந்நிகழ்ச்சியில்,
துணைத் தலைவர் முஹம்மது ஹாரிப் செயலாளர் ஆடிட்டர் கலீமுதீன் டாக்டர். ஃபஸ்லுல்லாஹ்,
டாக்டர் பஷீர் அஹமத், சென்னை மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் சம்சுஅலி, டெக்சிட்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சார்மிளா, டெக்ஸ்சிட்டி செவிலியர் கல்லூரி முதல்வர் ஜெப பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *