சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில்,ஏகனாபுரம் உள்ளிட்ட 13கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் பணியை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 908வது நாளாக பலதரப்பட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அன்மையில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட நிலையில் வேறு எந்தப் போராட்டத்தையும் தவெக மேற்கொள்ளவில்லை,தங்களை சந்திக்க வரவில்லை என ஏகனாபுரம் கிராம மக்கள் ஆதங்கம் தெரிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் விஜய்,பரந்தூரில் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டப வளாகத்தில் ஏகனாபுரம் கிராம மக்கள்,விவசாயிகள் மற்றும் போராட்டக் குழுவினரை நேரில் சந்தித்து அவர்களிடம் உரையாற்றினார்.