வழூர் சேஷாத்ரி சுவாமிகளின் 155 ஆவது ஜெயந்தி விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழூர் கிராமத்தில் பிறந்த சேஷாத்ரி சுவாமிகளின் 155 ஆவது ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த வைபவத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பங்கேற்று தொடங்கி வைத்தார். மேலும் இந்த வைபவத்தில் ஸ்ரீ பாலகிருஷ்ணர் ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்றது.
பிறகு சேஷாத்ரி சுவாமிகள் பற்றிய சிறப்புரை வழங்கப்பட்டது. மேலும் இந்த வைபவத்தில் இரத்தினகிரி பாலமுருகனடிமை ஸ்வாமிகள் திருவாரூர் ஆனந்த ஸ்ரீ விபூஷித சங்கர தீர்த்த ஸ்வாமிகள் பங்கேற்று ஆசியுரை வழங்கினர். மேலும் அரிகரன், களக்காடு பாலாஜி குழுவினர் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சேஷாத்ரி சுவாமிகள் மணிமண்டபம் ஸ்தாபகர் மகாலட்சுமி சுப்ரமணியம், பாஜக நிர்வாகி பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.