தேனி கிழக்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பங்கேற்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா திமுக நிறுவனத் தலைவர் எம் ஜி ஆரின் 108 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் தேனி கிழக்கு அண்ணா திமுக மாவட்ட செயலாளர் எஸ் டி கே .ஜக்கையன் தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பங்கேற்று எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற பொது மக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார் இந்த கூட்டத்தில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக் கோடை ராமர் உள்பட அண்ணா திமுக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக அண்ணா திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.