தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு செய்தார்
தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும்
தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில்
” உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் வட்டம் குலசேகரமங்கலம் மஜரா தன்னூத்து ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டும், கழிவு நீரோடை வசதி போன்ற அடிப்படை வசதி இல்லாத தெருக்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும்.
வெள்ளாளங்குளம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினையும், நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி. பாமாயில், சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகளையும். தரத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
நடுவக்குறிச்சி மேஜர் ஊராட்சி ஒன்றியத்தில் நாற்றங்கால் பண்ணை அமைக்கும் இடத்தில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, ஈச்சந்தா ஊராட்சி ஒன்றியத்தில்
உள்ள காசி பாண்டியன் என்பவரின் கல்குவாரியினை நேரடியாக பார்வையிட்டும், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் குழந்தைகளின் கல்வித்திறன் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும், சத்துணவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்பு அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும், அடிப்படை வசதிகளையும் கேட்டறிந்தார். கிராம நிர்வாக அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டும். பஞ்சாயத்து அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டார் அதனையெடுத்து சங்கரன்கோவில் வட்டம் பட்டாடை கட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும், சத்துணவு மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், தெற்குசங்கரன்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள கூட்டுறவு கடன் சங்கத்தினை நேரடியாக பார்வையிட்டும் ஆய்வு மேற் கொண்டார்.
தொடர்ந்து,இன்று முழுவதும் சங்கரன்கோவில் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அலுவலகங்கள் ஆய்வு மேற் கொள்ளப் படுவதோடு, சங்கரன்கோவில் வட்டம் நகரம் ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள ஜெய்சாந்தி மஹாலில் பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு முறையான கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்
என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது. சங்கரன்கோவில் வட்டாட்சியர் பரமசிவன். சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மேலநீலிதநல்லூர் வட்டாட்சியர். சங்கரன்கோவில் வருவாய் வட்டாட்சியர் மற்றும் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர். குடிமைப்பொருள் வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.