கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நீலகிரி வரையாடு பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் வியாழக்கிழமை கல்லூரியின் பசுமை இயக்கம் எக்கோ கிளப் மற்றும் கல்லூரி பேரவை சார்பாக நீலகிரி வரையாடு பாதுகாப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கல்லூரி நிறுவன செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் ஆகியோர் வழிகாட்டுதலின் படியும் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா முன்னிலையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்று பேசினார் நீலகிரி வரையாடு காப்பகம் உதவி வன பாதுகாவலர் திட்ட இயக்குனர் ஏ.சி எப் கணேஷ் ராம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகள் மற்றும் காடுகளின் முக்கியத்துவம் பற்றியும் மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார்
திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளை திட்டத் தலைவர் லதா மதிவேந்தர் மற்றும் குழுவின் சார்பாக மாணவர்களுக்கு வரையாடுகளின் சிறப்பை ஆடல் பாடல் நாடகங்கள் மூலம் நடித்துக் காட்டி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்
இந்த நிகழ்வில் கம்பம் ஈஸ்ட் ரேஞ்ச் மேகமலை டிவிசன் குழுவைச் சேர்ந்த 20 பேர் கலந்து கொண்டனர். திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளை திட்டத்தலைவர் லதாமதி வேந்தர் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏவுக்கும் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா அவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள் கல்லூரி அலுவலர்கள் அனைத்து துறை சார்ந்த மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர் பசுமை இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பேரவை உறுப்பினர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார்கள்.