விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் 36 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர்…
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 36 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி,விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமையில் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் எமதர்மன் வேடமிட்டு பொதுமக்களிடையே,சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டும்பொழுது ஹெல்மெட் அணிய வேண்டும்,மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது,ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும்,செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்து கலை நிகழ்ச்சி நடத்தினர்,மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளிடம் சாலை விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்