கரூர் செய்தியாளர் மரியான் பாபு
அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்..
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, தந்தோணி கிழக்கு ஒன்றியம், திமுக திருமலை நாதன்பட்டி கிளைச் செயலாளராக இருந்த மதன் குமார், கிருஷ்ண ரெட்டியூர் கிளைச் செயலாளராக இருந்த மணிவேல், திருமலை நாதன் பட்டியை சார்ந்த நாம் தமிழர் கட்சியில் இருந்த சிவகுமார், சண்முகராஜா, ராஜ்குமார் ஆகியோர் அக்கட்சிகளில் இருந்து விலகி தாந்தோணி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.சி.கே பாலகிருஷ்ணன் தலைமையில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர், கரூர் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.