செங்குன்றம் செய்தியாளர்
புழல் அருகே குட்கா பாக்கு பொருட்களை காரில் கடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 106 கிலோ குட்கா பாக்குகளையும் இரண்டு சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
புழல் பாலாஜி நகர் வெஜிடேரியன் வில்லேஜ் அருகே மைதானத்தில் காரில் குட்கா பொருட்களை கடத்துவதாக புழல் சரக காவல் உதவி ஆணையாளர் சகாதேவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த நான்கு பேரை லாவகமாக பிடித்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்,
அவர்கள் செங்குன்றம் , அம்பேத்கார்நகரை சேர்ந்த கருக்குவேல் (வயது 26) அம்பத்தூர் ,விநாயகபுரம் ,கலைஞர் கருணாநிதி தெருவை சேர்ந்த கண்ணையா (வயது 51) கொளத்தூர், டீச்சர்ஸ் காலனி ,மூகாம்பிகை நகரை சேர்ந்த கிருஷ்ணராஜ் (வயது 31 ) தூத்துக்குடி மாவட்டம் ,விளாத்திகுளம் ,விரசம்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 31) ஆகியோர் என தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் வந்த ஒரு காரில் இருந்து மறு காரில் குட்கா பொருட்களை இறக்கி வைத்து அதிலிருந்து மறு காரில்
ஏற்றி சென்னையில் சுற்றுப்புறங்களில் சிறு கடைகளுக்கு வியாபாரம் செய்வது தெரியவந்தது.
பின்னர் புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 106 கிலோ ஹான்ஸ், கூல்லிப் ,விமல் பாக்கு ஆகியவற்றை பறிமுதல் செய்து இரண்டு சொகுசு காரையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதை வாக்குகளின் மதிப்பு சந்தையில் விலை சுமார் ஒரு லட்சத்திற்கு மேலிருக்கும் என கூறப்படுகிறது.
இவர்களில் கருக்குவேல், சின்னத்தம்பி என்பவர்கள் ஏற்கனவே குண்டாஸ் சட்டத்தில் சிறை சென்று வெளியே வந்தது தெரிய வந்தது.