எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரத்தில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தினர் மத்திய அரசைகண்டித்து டிராக்டர் பேரணி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆச்சாள்புரத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு காவி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் 20 க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் ஆச்சாள்புரம் பெரிய கோயிலில் இருந்து பெட்ரோல் பங்கு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பேரணி நடைபெற்றது.
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வா வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தில் ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பி பெற விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்து தற்கொலைகளை தடுத்து நிறுத்திடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் கனோரி பார்டரில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் SKM (NP) தலைவர் ஜக்ஜித்சிங் டல்லே வால் உடன் மத்திய அரசு உடனை பேச்சு வார்த்தை நடத்தக்கோரியும், விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர்.