கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, 100 பயனாளிகளுக்கு ரூ.1,06,57,660 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தேசிய கொடியினை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள்.

தொடர்ந்து 100 பயனாளிகளுக்கு ரூ.1,06,57,660 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு .50,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.10,31,140 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.48,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.12,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்

நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.27,940 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ.25,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்தார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.3,50,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.10,80,250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.25,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.3,08,502 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1,97,828 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,75,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் என ஆகமொத்தம் 100 பயனாளிகளுக்குரூ.1,06,57,660 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இவ்விழாவில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் மற்றும் குடும்பநலத்துறை,வேளாண் பொறியியல் துறை, பேரூராட்சிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, பள்ளி கல்வித்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 201 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் 83 சிறந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.

மேலும், ஈக்குவிடஸ் குருகுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கடலூர் முதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளி, குளோபல் சிறப்பு பள்ளி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் ம.ராஜசேகரன்,மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அனு கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் இரா.சரண்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *