செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் சுவாமி விவேகானந்தா தொழிற்பயிற்சி நிலையத்தில் 40 ஆண்டுகள் தொடர்ந்து தேசிய கொடியை ஏற்றிய கலைமாமணி முனைவர் வி. முத்து அவர்களுக்கு இன்டர்நேஷனல் அச்சுவர்ஸ் யுனிவர்சல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் உலக சாதனை சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் விழா இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மேனாள் அரசவை கவிஞர் முத்துலிங்கம், தமிழியக்க பொதுச் செயலாளர் பேராசிரியர் அப்துல் காதர், தமிழியக்க மேலாண்மை குழு மாதவ. சின்ராசு, அபேதானந்தா பாலிடெக்னிக் நிர்வாகி டிகேபி.மணி, தமிழ்த் தாய் அறக்கட்டளை உடையார் கோவில் குணா, புதுவை தமிழ்ச் சங்க செயலாளர் சீனு. மோகன் தாசு, பொருளாளர் பழனிச்சாமி, கல்லூரி முதல்வர் முனைவர் இரா. ஏழுமலை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர்.