மதுரை புது ஜெயில் ரோடு நியூமில் காலனியில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நடந்த 76வது குடியரசு தினவிழாவில் செயலாளர் நித்தியானந்தம், தேசீயக்கொடியை ஏற்றி வைத்தார். துணைத்தலைவர் ராஜசேகரன் வரவேற்று பேசினார்.
செயலாளர் நித்தியானந்தம், பொருளாளர் ஏஞ்சல் தவச்செல்வி, ஆகியோர் சிறப்புரையாற்றினர்விழாவில் கமிட்டி உறுப்பினர் இந்திராணி, கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சங்க ஊழியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.