காங்கயம்
செய்தியாளர் பிரபு
செல் :9715328420
காங்கயத்தில் அனைத்து கிராம சபைக் கூட்டத்திலும் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி கண்டனம்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை அலுவலகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் கால்நடைகளை தொடர்ந்து தெருநாய்கள் கடித்து வருவதாகவும், அதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாள் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் நேற்று கிராம சபை கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் கண்டிக்கும் வண்ணம் தங்களது கால்நடைகளுடன் கருப்புக் கொடிகளை ஏந்திக் கொண்டு கலந்து கொண்டனர்.