எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே முன்னாள் மாணவர்கள் தான் படித்த பள்ளிக்கு ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கொண்ட கட்டிடத்தை பள்ளிக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆயங்குடி பள்ளத்தில் இங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளியின் வளர்ச்சிக்காக ரூபாய் 40 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கொண்ட புதிய கட்டிடத்தை கட்டி இன்று பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர்.
முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒத்துழைப்பின் பேரின் நிதி திரட்டி தாங்கள் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக புதிய கட்டடத்தில் இன்று நிர்வாகத்தினரிடம் மூலம் திறந்து வைத்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
மேலும் முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் பள்ளியின் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் குழு சார்பாக நிதி திரட்டி பள்ளியை வளர்ச்சி அடைய தொடர்ந்து செய்து வருவோம் என தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தான் படித்த பள்ளியில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.