திண்டுக்கல் மாவட்டம் – பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் 2025 ஆம் ஆண்டிற்கான தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அனைத்து அரசுத்துறைகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதர், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமார், சார் ஆட்சியர் கிஷன்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.பிரதீப், திருக்கோயில் நிர்வாகத்தினர், அறங்காவலர்கள் குழு தலைவர் (ம) உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.