கரூர் செய்தியாளர் மரியான் பாபு
போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவங்கி வைத்தனர்.
கரூர் மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பாகவும், கரூர் மாவட்ட காவல்துறை சார்பாகவும், மது அருந்துதலுக்கு அடிமையாகாமல் இருக்கவும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாமல் இருக்கவும் மற்றும் போதை மருந்துகளை தவறான பயன்பாண்டிற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா, I.P.S., மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கலால் அலுவலர் கருணாகரன், கரூர் நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ் கலந்து கொண்டார்கள். பேரணியில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டார்கள்.