செங்குன்றம் செய்தியாளர்
சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் வடக்கு மண்டலம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தில் முன்னிட்டு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மாதவரம் தனியார் பெண்கள் கலைக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் லீமா ரொசாரியோ தலைமை வகித்தார். சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் ஐபிஎஸ், போக்குவரத்து துணை ஆணையர் விஷ்வேஷ் பிசாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டு போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது, பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்டுவது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் .
மேலும் கல்லூரியின் வாசலில் மாணவிகள் பதாகைகளை ஏந்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அவ்வழியே வரும் வாகனங்களை நிறுத்தி தலைக்கவசத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்கள்.
தொடர்ந்து போக்குவரத்து தொடர்பான வினா , விடை போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். உதவி ஆணையர் சத்தியமூர்த்தி சத்தியமூர்த்தி ஆய்வாளர்கள் சக்திவேல் சக்திவேல் சுடலைமணி, உதவி ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள் அய்யனார், மகேந்திரன் ,மாடசாமி மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் அன்னம்மாள் அற்புதமேரி கல்லூரி வளர்ச்சி அதிகாரி பெனடிக்ட்குமாரி ஆலோசகர் முருகேசன் காவலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.