கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.3 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம் எல் ஏ கலந்துகொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி இணை இயக்குனர் பரமசிவம், போச்சம்பள்ளி தலைமை மருத்துவ அலுவலர் ஆர். நாராயணசாமி, டாக்டர் விஜயராஜன், செவிலியர் கண்காணிப்பாளர் நிலைய 2 டி.வி. இன்பா, செவிலியர் வே.பூர்ணிமா, விஜயா, மருத்துவமனை ஊழியர்கள் உஷா, சுமதி, ரோஜா,ராமன்,எழுத்தர் தியாகராஜன் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் போச்சம்பள்ளி சாந்தமூர்த்தி, மத்தூர் குணா வசந்தரசு, ரஜினி செல்வம், முன்னாள் ஒன்றிய குழுஉறுப்பினர் அம்மன் ராஜா, பர்கூர் முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் அருள், சரவணன், அர்ஜுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து போச்சம்பள்ளியில் அரசு புதிய துணை சுகாதார நிலையம் ரூ.39, 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தே.மதியழகன் எம் எல் ஏ கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.