திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்திற்கு எதிரே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுகாதார வளாகம் உள்ளது. இந்த வளாகம் பல மாதங்களாக பழுதடைந்து பூட்டி கிடந்தது. இதனை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சுகாதார வளாகம் சீரமைக்கும் பணி துவங்கி நடைபெற ஆரம்பித்தது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இன்னும் கழிவறைகளுக்கு கதவுகளும், மின்விளக்கு வசதிகளும் சீர் செய்யாமல் பூட்டி கிடக்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி வலங்கைமான் பேரூராட்சி நிர்வாகம் இந்த சுகாதார வளாகத்தை விரைந்து சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மகாமாரியம்மன் ஆலயத்தில் வருகின்ற மார்ச் மாதம் பங்குனி பெரும் திருவிழா நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்க ஆளாவார்கள். எனவே விரைந்து பணிகளை முடித்து சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்