எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே செம்மங்குடி ஊராட்சியில் சாலை,தெரு விளக்கு, குடிநீர் இணைப்பு,பட்டா மற்றும் வீட்டு மணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற காத்திருப்பு போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்டவி.ஐ.பி நகர்,கூட்டுறவு நகர்,பிரியங்கா நகர்,கிருஷ்ணா நகர்,அனிதாபுரம் வேளச்சேரி, தெரு வடக்கு தெரு அம்பேத்கர் காலனி தெரு வில்வராயநத்தம் குளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை அமைத்துக்கொடுக்க கோரியும்,,அனுமதி பெற்ற சாலைகளை காலதாமதப்படுத்தாமல் பணிகளை உடனே தொடங்க வேண்டுமெனவும்,,ஜல்ஜுவன் திட்டத்தின் கீழ் ஊராட்சியில் விடுபட்ட வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு அமைத்து தர வேண்டுமெனவும்,நீண்ட காலமாக குடியிருப்பு பட்டா இல்லாமல் வசித்து வரும் குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டுமெனவும், மனையில்லா குடும்பங்களுக்கு இலவச குடியிருப்பு மனை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக் குழு தலைவர் பார்த்திபன் சித்தார்த் தலைமையில் பொதுமக்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.