பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பட்டா மாற்றம் செய்து தருவதற்காக 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வங்குடி கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்
மீன்சுருட்டி அருகேயுள்ள அய்யப்பன் நாயக்கன் பேட்டை கிராமத்தை சோ்ந்த கோதண்டபாணி மகன் வேல்முருகன் விவசாயக் கூலித் தொழிலாளியான இவா், தனது நிலத்தை பட்டா மாற்றம் செய்து தரக்கோரி வங்குடி கிராம நிா்வாக அலுவலா் புகழேந்தியை அணுகிய போது 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளாா் புகழேந்தி, லஞ்சம் கொடுக்க விரும்பாத வேல்முருகன் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, காவல் துறையினா் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய பணத்தை பெற்றுக் கொண்ட வேல்முருகன் அதனை கிராம நிா்வாக அலுவலா் புகழேந்தியிடம் கொடுத்தாா் அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையிலான கவிதா , ரவி உள்ளிட்ட காவல் துறையினா், புகழேந்தியை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதனையடுத்து அவரை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனர்