மதுரை காமராஜர் பல்கலைக்கழக பெண்கள் கல்வி மைய பேராசிரியர்கள் பல் கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பெண்கள் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையம் பெண் கல்வி, பொருளாதார மேம்பாடு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள் ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் முன்னேற் றம் குறித்து விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர். இந் நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பெண் கள் கல்வி மையம் முன்பு பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது , பெண்கள் கல்வி மையத்தின் செயல்களுக்கு பல்கலைக்கழக நிதி அலுவலர் இடையூறாக இருக்கிறார். பல்கலைக்கழக மானிய குழு பெண்கள் கல்வி மையத்திற்கு வழங்கும் நிதியை பல்கலைக்கழக நிர்வாகம் பெற்றுக்கொண்டு சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கப் படுகிறது.
இது குறித்து பல்கலைக்கழக பதிவாளருக்கு நிதி அலுவலர் நெருக்கடி கொடுத்து சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பலன்களை பெற விடாமல் தடுக்கின்றனர்.
இந்த விஷயத்தில் உயர்கல்வி துறை மற்றும் தமிழ்நாடு அரசு தலை யிட்டு நிலுவையில் உள்ள 6 மாதசம்பளம் மற்றும் துறை வளர்ச்சிக்கு பல்கலைக்கழக மானிய குழுவால் ஒதுக்கப் பட்ட நிதிகளை ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.