
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜபேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடும், பொது விருந்தில் கலந்து கொண்ட மகளிர்க்கு விலையில்லா புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், ஆய்வர்/ தக்கார் க. மும்மூர்த்தி, வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா. சிவனேசன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க. தனித்தமிழ் மாறன், ஒன்றிய பிரதிநிதிகள் சிங்குத் தெரு எஸ் ஆர் ராஜேஷ், வி.சி.ராஜேந்திரன், சிவ. செல்லையன், நிர்வாகிகள் சதானந்தம் கோ.சண்முகசுந்தரம் யாதவ், தர்மராஜ் மது சோழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகளிர்க்கு விலையில்லா புடவைகளை திமுக நகர செயலாளர் பா.சிவனேசன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பொது விருந்து நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொது விருந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி, ஆலய அலுவலக மேலாளர் தீ.சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.