பெண் ஊழியர்களுக்கு சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்
தேசிய சட்டப்பணிகள் இன் ஆணைக்குழு மற்றும் மாநில சட்ட்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைத்து பணியிடத்தில் பாலியல் சீண்டல் தடுப்பு சட்டம் குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆனது முதன்மை மாவட்ட நீதிபதி /தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது.
மேற்படி கருத்தரங்கில் மூத்த வழக்கறிஞர்கள் சொர்ணலதாமற்றும் நர்மதா தேவி, மற்றும் வழக்கறிஞர்கள் அமலோற்ப ரோஜா மற்றும் ஜெப சோபனா ஆகியோர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் /மூத்த உரிமையியல் நீதிபதி கலையரசி ரீனா, முன்னிலை வகித்தார்.
மேற்படி கருத்தரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஊழியர்கள் 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மேற்படி கருத்தரங்கில் தங்களுக்கு உண்டான சட்டம் சம்மந்தமான சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொண்டார்கள்.
முதன்மை மாவட்ட நீதிபதி/தலைவர் அவர்கள் தனது தலைமை உரையில் பெண்கள் அன்றாட வாழ்வில் மற்றும் பணியிடத்தில் சந்திக்கின்ற பாலியல் பிரச்சனைகள் மற்றும் அதிலிருந்து எவ்வாறு தங்களை காத்துக்கொள்ளலாம் என்றும், பெண்கள் இச்சமுகத்தில் ஆண்களுக்கு ஒருபோதும் சலைத்தவர்கள் அல்ல என்றும், பெண்கள் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், வரதட்சணை சட்டம் குறித்தும், பெண்கள் ஆடை வடிவமைப்பில் உண்டான பிரச்சனைகள் குறித்தும், இதன் மூலம் ஏற்படும் பிரச்சனையில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாக்கலாம் என்பது குறித்தும், தேசிய சட்ட உதவி எண். 15100 குறித்தும், அதன் செயல்பாடு குறித்தும், குழந்தைகள் பாலியல் பிரச்சனை குறித்தும், பெண்கள் ஒருங்கிணைந்த சேவைமையம் 181 செயல்பாடு குறித்தும், பெண்கள் தனது செல்போன் பயன்பாட்டில் உண்டான ஆபத்து குறித்தும், அதிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாக்கலாம் என்பது குறித்தும், விளக்கமாக மேற்படி கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.