எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
பூம்புகார் தொகுதியில் 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 63 பள்ளிகளை சேர்ந்த 10000 மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் பேனா வழங்கிய பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம் முருகன்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுத்தேர்வு எழுதும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி உள்ளிட்ட 63 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் நேரில் சென்று பேனாக்கள் வழங்கினார்.ரூ.80 மதிப்புக் கொண்ட பேனாக்களை தனது சொந்த செலவில் வழங்க திட்டமிட்டு மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ வி மெய்யநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனா வழங்கி தொடங்கி வைத்தார் இதில் மயிலாடுதுறை எம்பி சுதா, எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், ராஜ்குமார் மற்றும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நேரில் சென்று வழங்கினார் தமிழகத்தில் வருகின்ற மார்ச் மாதத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இப்போது வழங்கும் பேனா உங்களுக்கு தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது என தெரிவித்தார்