கரூர் செய்தியாளர் மரியான் பாபு

சோழமண்டலத்தில் நடைபெறவிருக்கும் சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டிற்கு கரூரிலிருந்து சுமார் 5 ஆயிரம் நபர்களை திரட்டி மாநாட்டில் கலந்து கொள்வதாக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து சோழமண்டலத்தில் உள்ள கும்பகோணத்தில் சமய சமுதாய நல்லிணக்க மாநாடு வருகிற 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது
அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் கரூரில் உள்ள தனியார் மஹாலில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பி.எம். கே பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக எதிர்வரும் 23ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற இருக்கும் சமய சமுதாய நல்லிணக்க சோழா மண்டல மாநாட்டிற்கு கரூர் மாவட்டத்தில் இருந்து 100 வாகனங்களில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மேல் சென்று கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் மாதம் மூன்று முறை மட்டுமே குடிநீர் வழங்கிக் கொண்டிருக்கிறது
இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவும் கோயம்பள்ளி மேம்பாலம் கட்டப்பட்டு திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இந்தக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் தமிழ்மணி, மாநகரச் செயலாளர் ராக்கி முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் ம.மணி மாநில பொது குழு உறுப்பினர் சுப்பிரமணி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட துணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் நகர பேரூர் ஒன்றிய கிளைச் செயலாளர்கள், மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.