பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்குமார் (வயது 30). கூலித்தொழிலாளியான இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பொன்குமார், அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்போரில் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பொன் குமாரை அழைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ‘போக்சோ’சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பொன்குமாரை கைது செய்தனர்.
தொடர்ந்து பொன்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான பொன்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனியில் காவல் உதவி ஆய்வாளரை வெட்டி கொலை செய்யும் முயன்றது தொடர்பான வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.