செங்குன்றம் செய்தியாளர்

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ( NADCP) சார்பில் வில்லிவாக்கத்தில் அரசு கால்நடை மருத்துவர்கள் பெண் கன்றுகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் , பலராமபுரத்தில்,மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஜெயலட்சுமி, உதவி இயக்குனர் ஜெயலட்சுமி தலைமையில்,கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் கார்த்தியாயினி , அஜ்மா பானு ,பேபி பியூலா ஆகியோர்கள் பங்கேற்ற இந்த கால்நடை மருத்துவ முகாமில் 4 முதல் 8 மாத பெண் கன்றுகளுக்கு வீச்சுநோய் வராமல் பாதுகாக்க தடுப்பூசியை செலுத்தினர். இந்த முகாமில் மாடு வளர்ப்போர் தனது கன்றுகளை அழைத்து வந்து ஊசியை போட்டு கொண்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *