எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே மூன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு சப்தமிட்டதால் கொடூரமாக தாக்கிய உறவினரான சிறுவன் கைது.சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மூன்றரை வயது பெண் குழந்தை அப்பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு சென்றுள்ளது. உணவருந்தி விட்டு வெளியே வந்த குழந்தையை அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான 16 வயது சிறுவன் சாக்லேட் வாங்கி கொடுத்து தனியே அழைத்துச் சென்றுள்ளார். மறைவான இடத்திற்கு சென்ற பின்னர் குழந்தை இடம் தவறாக நடக்க முற்பட்டபோது குழந்தை சப்தமிட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் அருகே இருந்த கல்லால் குழந்தையின் தலையில் கொடூரமாக தாக்கியுள்ளான்.
இதில் தலை பலத்த காயமடைந்து ஒரு கண் சிதைந்த நிலையில் குழந்தை மயக்கமாகியுள்ளது. அங்கிருந்து சிறுவன் தப்பிச்சென்ற நிலையில் அங்கன்வாடி சென்ற குழந்தை வெகு நேரமாக வீடு திரும்பாததால் பெற்றோரும் உறவினர்களும் குழந்தையை தேட துவங்கியுள்ளனர்.வெகுநேரம் தேடிய பின்னர் அங்கன்வாடிக்கு பின்புறம் உள்ள புதர் பகுதியில் குழந்தை தலையில் ரத்தக்காயத்துடன் மயங்கி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தையை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர் அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குழந்தை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் குற்ற செயலில் ஈடுபட்ட குழந்தையின் உறவினரான 16 வயது சிறுவனை கைது செய்த அனைத்து மகளிர் போலீசார் நீதிபதி முன்பு முன்னிலைப்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.