கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் கடும் போக்குவரத்து நெரிசல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அரசு மருத்துவமனை அருகே நகரப் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திலிருந்து டிப்போ நோக்கி சென்றது அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக நடுவலியிலேயே நின்றது.
தொடர்ந்து கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்துகின்றன. தொடர்ந்து வழியே கனரக வாகனம் ஒன்று வந்த நிலையில் பேருந்து நடுவழியில் நின்றதன் காரணமாக பேருந்தை தாண்டி செல்ல முடியாமல் நடுவலியிலேயே நின்றது இதை அடுத்து அங்கிருந்தவர்கள் பேருந்தை சாலையோரமாக தள்ளி நிறுத்தினர்.
தொடர்ந்து போக்குவர த்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் வழக்கம் போல இயங்கிச் சென்றன. இதன் காரணத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.