விருத்தாசலத்தில் மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் பாஜக அரசை கண்டித்து திமுக மாணவர் அணி மற்றும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பதுடன், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய கல்விக்கான நிதியை தரமறுத்து, மீண்டும் மொழிபோருக்கு நிர்பந்திக்கும் பாசிச பாஜக அரசை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க மாணவரணி சார்பில், விருத்தாசலம் தலைமை அஞ்சலக அலுவலகம் அருகே கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சதீஷ்குமார், துணை அமைப்பாளர் செல்வமணி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அருள்குமார், நகர செயலாளர் தண்டபாணி, திமுக நல்லூர் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட திமுக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.