மதுரையில் நடந்த திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பனிவேல் தியாகராஜன் பேசினர்.மதுரை மாவட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக் கான பணிகள், அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் பிரமாண்டமாக துவங்கியுள்ளது.
திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி யபடி, துணை முதல்வர். இளைஞரணி செயலா ளர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையின் படி, 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ண யித்து, திமுக தேர்தல் பணியாற்றி வருகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது தேர்தல் பணி விறுவிறுப் பாக தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க.வுக்கு உட்பட்ட மேற்கு சட்டமன்றத் தொகுதி பொது உறுப்பினர்கள் கூட்டம், வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சரு மான பி.மூர்த்தி ஏற்பாட்டில் நடந்தது.
கூட்டத்தில் மதுரை மேற்கு தொகுதியை சேர்ந்த 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பொது உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று தொண்டர்களுக்கு பல் வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, “வரும் சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டத்தில் மதுரை மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என முதல்வரும், துணை முதல்வரும் கூறியுள்ளனர். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, 10 தொகுதிகளி லும் வெற்றி பெற உழைக்க வேண்டும்.
200 தொகுதி கள் வெற்றி பெறுவதில் மதுரை மாவட்டம் முதல் மாவட்டமாக இருக்கும். அதிலும் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி அதிக வாக்குகளை பெற்ற தந்த தொகுதியாக உருவாக்குவோம்” என்றார்.
அமைச்சர் பிடி ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “20 ஆண்டுகளாக மாற்றுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தொகுதியை மீட்பது கடினமான பணியாக இருந்தாலும், தலைமையின் இந்த நிர்வாக சீர்திருத்தம் மாற்றம் நல்ல பலனை தரும் என எதிர்பார்க் கிறோம். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல் பட்டு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய பாடுபடுவோம்” என்றார்.