இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
பனங்குடி பார்வதீஸ்வரர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை
திருவாரூர் ஆண்டிப்பந்தல் அருகில் பனங்குடி கிராமத்தில் உள்ள பரணி நட்சத்திரத்திற்கு உரிய திருத்தலமான அருள்மிகு பார்வதீஸ்வரர் சமேத பார்வதீஸ்வரி ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் மூலவர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் அதனைத் தொடர்ந்து குத்து விளக்கு பூஜை நடைபெற்றது .இதில் ஏராளமான பெண்கள் பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டனர்.