கோரைப்புல்லை புல் பயிர் பட்டியிலிருந்து நீக்கி பணப்பயிர் பட்டியலில் தமிழக அரசு சேர்க்க வேண்டும் இளம் விவசாயிகள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இளம் விவசாயிகள் சங்கம் தலைமை செயற்குழு கூட்டம் மாணிக்கவாசகர் திருமணமண்டபத்தில் மாநில தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையிலா நடைபெற்றது இந்த கூட்டத்தில் விவசாயிகளின் முக்கிய கோரிக்கை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் 12 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த கூட்டத்திற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் திரு.R.வேலுசாமி கலந்து கொண்டு செய்தியாளர்கள் சந்தித்தார் அப்போது பரமத்தி வேலூர் வெற்றிலை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது
ஆகையினால் கிடப்பில் போடப்பட்ட வெற்றிலை ஆராய்ச்சி மையம் உடனடியாக இந்த அரசு திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் கரூர் நாமக்கல் திருச்சி மாவட்டங்களில் அதிக அளவில் கோரை புல் பயிரிடப்படுகிறது கோரைப்புல்லை புல் பட்டியிலிருந்து நீக்கி பணப் பயிர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உடனடியாக மத்திய மாநில அரசுகள் பயிர் கடன் வழங்க வேண்டும் தமிழகத்தில் உள்ள சந்தைகளில் விவசாயிகள் கொண்டு வரும் விளையும் பொருட்களான காய்கறிகளை அந்தந்த பேரூராட்சிகள் நிர்ணயத்த கட்டணத்தை விட விற்க சுங்கவரி மிக அதிகமாக வசூலிக்கப்படுகிறது இதனை அந்தந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நீக்க வேண்டும். ராஜா வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பேட்டியில் தெரிவித்தார் பேட்டியின் போது இளம் விவசாயிகள் சங்க தலைவர் மற்றும்நிர்வாகிகள் உடன் இருந்தனர்.