காவனூர் ஊராட்சியில் மகா சிவராத்திரி முன்னிட்டு அன்னதானம் திட்டம்.

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள காவனூர் ஊராட்சியில் காகித பட்டறை கிராமத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி, தலைமை தாங்கினார் பள்ளி ஆசிரியர் மாரியப்பன், நிர்வாகிகள் கார்த்திக்கேயன், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக டெல்லி உயர்நீதிமன்ற முதன்மை வழக்கறிஞர் உதய் பிரதாப் சிங் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.


அப்போது அவர் தன்னார்வலர்கள் அன்னதானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும்.மகா சிவராத்திரியில் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகுந்த புண்ணியத்தையும் பலன்களையும் தருவது போல் அன்ன தானம் செய்வது அளவிட முடியாத அளவுக்கு புண்ணியம் தரும்.அன்னதானம் செய்ய இயலாதவர்கள் முடிந்த அளவு இவர்களை உபசரிக்கலாம். கிராமவாசிகளுக்கு செய்யும் உதவி மிக எளிதாக இறையருள் பெற்றுத்தரும் என்றார்.

இதனையடுத்து ஏழை எளிய மக்களின் பசியினைப் போக்கும் விதமாக நூற்றுக்கணக்கானோருக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இதில் திரளான கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *