அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ராஜ் மீனாம்பிகை ராஜ் லிங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் மஞ்சமலை நாகம்மாள் மகா பிரத்தியங்கிரா தேவி ஸ்ரீ வாராஹி அம்மன் சொர்ண பைரவர் 18 சித்தர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இதற்கான கும்பாபிஷேகம் நேற்று காலை 10 மணி அளவில் கும்பாபிஷேக விழாநேற்று நடைபெற்றது.
கடந்தஇரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், கோ பூஜை, தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்தது. அழகர்கோவில், ராமேஸ்வரம், உள்ளிட்ட புனித ஸ்தளங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள செல்வ விநாயகர் குமரவேலன் ராஜ் மீனாாம்பிகை ராஜலிங்கேஸ்வரர் சனீஸ்வரர் சொர்ண பைரவர் கருப்பண சுவாமி தட்சிணாமூர்த்தி துர்க்கை சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அபிஷேக மலர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டு மஹா அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய விழா குழுவினர் செயத்திருந்தனர்..