வால்பாறை அருகே குறுகிய உயரமான நகராட்சி சாலையால் தொடரும் அவலநிலை வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தொடர்வேதனையை போக்க மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை டீத்தூள் கடை முதல் அக்கா மலை எஸ்டேட் பகுதி வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரம் வால்பாறை நகராட்சிமூலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது அந்த தார்சாலை உயரமான குறுகிய சாலையாக அமைக்கப்பட்டு சாலையின் இரு ஓரங்களிலும் காங் ரீட் தளம் அமைத்து தருவதாக கூறியதோடு அப்பணியை கிடப்பில் போடப்பட்டுள்ளது
இதனால் ஒரே வாகனம் செல்லும் அளவுள்ள அந்த சாலையில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி ஒதுக்க முடியாமல் இருசக்கர வாகனம் முதல் அனைத்து வாகன ஓட்டிகளும் பின்னோக்கியே நீண்ட தூரம் சென்று ஏதாவது ஒரு பகுதியில் பெரும் சிரமத்திற்கு பின்னர் வழி ஒதுக்கி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் இந்நிலையில் அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் அதே அவல நிலை தொடர்ந்து வருகிறது
இந்த அவலநிலை குறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு பொதுமக்கள் பலமுறை தொடர் கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள அந்த சாலைப் பணியை விரைவில் சீர்செய்யவும் சாலையின் முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகைகளை அமைக்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்