சின்னமனூர் சிவகாமியம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது தேனி மாவட்டம் செப்பேடு புகழ் சின்னமனூர் அருள்மிகு சிவகாமி யம்மன் உடனுறை அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டார்கள்
இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இது குறித்து கோவில் செயல் அலுவலர் அ. நதியா கூறும்போது இந்த சிவாலயம் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததாகும் உயர்ந்த சிவஸ்தலம் எது என்று கேட்ட நைமி சாரண்யா முனிவர்களுக்கு சுதமா முனிவர் பதினெண் புராணங்களில் ஒன்றான கந்தபுராணத்தில் சங்கர சங்கிதையில் கூறிய சிவத்தலங்களில் சிறந்த தளம் பூலாவனமாகும் என்று பூலாநந்தீசுவரர் கோவில் குறித்து குறிப்பிட்டிருக்கிறார் இவ்வாறு கோவில் செயல் அலுவலர் கூறினார்
மேலும் இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் மாசி மக சிவராத்திரியை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு தொடங்கி இரவு முழுவதும் காலை 6 மணி வரை நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றன மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுக்க நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன
மேலும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டு பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி அம்மனை தரிசிக்க பக்தர்கள் வரிசையாக வந்து எந்தவித தடங்களும் இன்றி சிவகாமி யம்மன் உடனுறை அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசிக்க கோவில் அலுவலர்கள் வெகு சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்
மகா சிவராத்திரியை முன்னிட்டு தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் தாய்மார்கள் கோவிலுக்கு வந்து அம்மனை மனம் உருக தரிசித்து அம்மன் அருள் பெற்று சென்றனர்
இந்த விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பெரியசாமி தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்